சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி : மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கடந்த 9-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே  26-ம் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை இயக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த வரும் தொடர் மழை காரணமாக மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் மலைரெயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே வரும் 31-ம் தேதி வரை மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதன் காரணமாக முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மலை ரெயில் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists rejoice Mettupalayam Ooty hill train service resumes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->