குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் - பரபரப்பாக காணப்படும் படகு தளம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில், அதிகாலை கடலில் சூரியன் உதயமாகும் மற்றும் மாலையில் சூரியன் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர் . 

அதுமட்டுமல்லாமல், கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சவாரி மூலமாக சென்று காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். 

அதன் படி, இன்று வார விடுமுறை என்பதால், சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குமரி கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் கடற்கரையில் முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடியும் உற்சாகம் அடைந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகு தளத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரி விழா கோலமாக கட்சி அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touriters and sabarimalai devotes visit kanniyakumari beach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->