போக்குவரத்தை சீர் செய்த காவலருக்கு நேர்ந்து சோகம்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் (வயது 45) ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றி வந்தார். இன்று வழக்கம் போல் ஸ்ரீபெரும்புதூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் சாலை இணையும் கூட்டுச்சாலையில் முத்துக்குமரன் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் கலவை இயந்திரத்தை இழுத்து வந்த 407 கூண்டு வண்டி மோதியதில் அவர் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி இடையே சிக்கி வலது கால் முழுவதும் முறிந்தது. 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துக்குமாரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை அடுத்து போலீசார் முத்துக்குமாரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic Police did issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->