சிவகங்கை அருகே பெரும் சோகம்!...விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில்,  அவரின் வீட்டில் கடந்த 3 நாட்களாக செப்டிக் டேங்க் குழி தோண்டம் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா, திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் ஈடுபட்டிருந்த நிலையில், அப்போது திடீரென இருவரையும் விஷவாயு தாக்கியுள்ளது.


பின்னர் இருவரும் மயக்கமடைந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரை சேரத்த ஒரு வீரர் குழிக்குள் இறங்கியபோது அவருக்கும் மயக்கம் வந்ததையடுத்து, அவரை உடனடியாக மேலே தூக்கினர்.

பின்னர் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் இருவரையும் மீட்ட வனத்துறையினர்  அவர்களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதுகுறித்து இளையான்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy near Sivagangai Two killed in gas attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->