வேலூர் அருகே சோகம்!...பெற்ற குழந்தையை 8 நாட்களில் கொலை செய்த கொடூர பெற்றோர்!...தலைமறைவான 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை யை சேர்ந்த சேட்டு-டயானா என்ற தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறந்த 8வது நாளில், குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி, வீட்டிற்கு பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர். குழந்தையில் மரணத்தில் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது, குழந்தையின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து  பச்சிளம் குழந்தையின் உடல்  பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதிகாரிகள் மேற்கொண்ட  ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததாகவும்,  வீட்டிற்கு அருகே  எருக்கஞ்செடி உடைக்கப்பட்டு இருப்பதால், இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்று இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இந்நிலையில் தலைமறைவான குழந்தையின் பெற்றோரான சேட்டு மற்றும் டயானாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy near Vellore Cruel parents who killed their child in 8 days 2 absconding persons arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->