சென்னை - கோவை இடையே ரயில் சேவை ரத்து..!! ரயில்களின் முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் கோவை இடையே செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணியின் காரணமாக வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு காலை 6:10 மணிக்கு செல்லும் கோவை விரைவு ரயில் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளிலும், காலை 7:10 மணிக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயில் ஜனவரி 4ம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் கோவை விரைவு ரயில் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளிலும், மாலை 3:05 மணிக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயில் ஜனவரி 4 ஆம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை மாலை 03:30 மணிக்கு இயக்கப்படும் ரயில் டிசம்பர் 26, 27 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக காட்பாடி முதல் அரக்கோணம் வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு காலை 05:15 மணிக்கு புறப்படும் ரயில் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் காட்பாடியிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train canceled between Chennai Coimbatore for 2 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->