கோவை || சட்டம் படிக்க விரும்பி மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்த திருநங்கை.!
trans gender pettition to human rights commission in coimbatore
கோவை || சட்டம் படிக்க விரும்பி மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்த திருநங்கை.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள, தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சின்ன முனியாண்டி-சரஸ்வதி தம்பதியினர். இவர்களுடைய மகள் பிரனிஷ்கா. திருநங்கையான இவர், தித்திப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இதையடுத்து சட்டம் படிக்க விரும்பிய அவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு பல்கலைக்கழகத்திலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை.
இது தொடர்பாக பிரனிஷ்கா, கோவைக்கு வந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரனிடம் மனு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
"திருநங்கைகள் பல்வேறு துறையில் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில் நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், எனக்கு பல்கலைக்கழகத்திலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை. என் விண்ணப்பித்தை நிராகரித்து விட்டதாக நினைக்கிறேன்.
இதனால், எனக்கு சட்டம் படிக்க உதவி செய்ய வேண்டும். சட்டக்கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்தேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
trans gender pettition to human rights commission in coimbatore