திண்டுக்கல் | திருநங்கை - திருநம்பி திருமணத்தை நடத்த மறுத்த கோவில் அதிகாரிகள்! உள்ளம் குமுறும் திருநங்கைகள்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம்: வேடப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). இவர் ஆணாகப் பிறந்து திருநங்கையாக மாறி மாயா என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார். 

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 24) இவர் பெண்ணாகப் பிறந்து திருநம்பியாக மாறி கணேசன் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார். 

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து திண்டுக்கல்லில் உள்ள கோவிலில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்திருந்தனர். 

ஆனால் கோவில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் இதனை மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து திருநங்கை மாயா மற்றும் திருநம்பி கணேஷ் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

அந்த திருமணத்தை உடனிருந்த திருநங்கைகள் நடத்தி வைத்து, அவர்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வித்தியாசமான முறையில் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

இது குறித்து திருமணம் நடத்தி வைத்த திருநங்கைகள் தெரிவிக்கையில், ''தன் பாலின ஜோடிகள் சேர்ந்து வாழ்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் திருநங்கையும் திருநம்பியும் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையை, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூகத்தினர் ஏற்றுக்கொண்டனர். 

ஆனால் தமிழகத்தில் இது போன்ற திருமணங்களை பொதுமக்கள் மற்றும் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை போல இது போன்ற திருமணங்களை ஏற்றுக் கொள்ளவும் மனநிலை மறுக்கிறது. 

இவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து இந்த தம்பதியினருக்கு சமூக அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும், அப்போதுதான் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் தற்கொலைகள் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்'' எனவும், திருநங்கைகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender marriage refused temple authorities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->