கூவாகத்தில் விண்ணை முட்டிய அழுகுரல்.. அரவான் களப்பலியால் திருநங்கையர் விதவைக் கோலம்..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. 

கூத்தாண்டவர் கண் திறத்தல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்து, கைகளில் வண்ண வளையல்கள் அணிந்து, தலை நிறைய பூச்சூடி, மணப்பெண் கோலத்தில் கோயிலுக்குள் சென்று கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

கோயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட திருநங்கைகள் இரவில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று காலை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், திருநாவலூர் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் கூவாகம் பகுதியின் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்று பந்தலடியை அடைந்ததும் அரவான் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரவானுக்கு தாலி கட்டி இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியில் இருந்த திருநங்கைகள் களப்பலி கண்ட அரவானை கண்டு தாலி அறுத்தும், நெற்றியில் இட்ட திலகத்தை அழித்தும், வளையல்களை உடைத்தெறிந்தும் கதறி அழுத குரல் விண்ணை முட்டியது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள குளங்களில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினர். நாளை தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender Widow to see Aravan Kalapali in Koowagam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->