ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள்! 17-ஆம் தேதி முதல்கட்ட ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. 

அதில் ஒவ்வொரு தொழிற்சங்கம் சார்பாக ஒரு நிர்வாகியை இணைத்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஆலோசனைகளைப் பெற திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. போக்குவரத்து துறை செயலாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport Employees Pention


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->