அரசு பேருந்துகள் இனி சைவ உணவகங்களில் மட்டுமே நிற்கும்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்துகள் பயணத்தின்போது நிறுத்தும் பயண வழிக் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உரிமம் பெற்றுள்ள பயண வழி உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விதித்துள்ள நிபந்தனையில், 'உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி இருக்க வேண்டும். பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும்.

உணவக வளாகத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்ஆர்பி-யை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்.

உணவு பொருட்களின் விலை பட்டியல் பயணிகளுக்கு தெரியும்படி வைக்கவேண்டும். மேலும், உணவகத்தில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்' என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Travel side hotels only prepared veg foods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->