திருச்சியில் பயங்கரம்.. பைக்கில் எடுத்துச்செல்லப்பட்ட வெடிமருந்து.! தூக்கிவீசி துடிதுடித்த உயிர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் பைக்கில் வெடிபொருள் எடுத்துச் சென்றபோது, அந்த பொருள் வெடித்து சிதறியதில் பைக் ஓட்டியவர் உயிரிழந்துள்ளார். 

திருச்சி மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் வெடிவிபத்தில் சிக்கி இறந்துள்ளார். இவர் தனது பைக்கில் வெடி பொருளை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஊருக்கு சென்றுள்ளார். 

அப்போது குளித்தலை பகுதியிலுள்ள பாலவிடுதி குளக்காரன்பட்டியில் திடீரென்று வாகனத்தில் இருந்த வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இது குறித்து கேள்விப்பட்டு வந்த பாலவிடுதி காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எடுத்துச் சென்ற வெடிபொருள் நாட்டு வெடி மருந்தா அல்லது பாறைகளை உடைக்க பயன்படுத்துகின்ற ஜெலட்டின் வகை வெடிமருந்தா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy crackers accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->