''மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி''; விவாகரத்து குறித்த செய்திக்கு திருச்சி டி.ஐ.ஜி பதிலடி..!
Trichy DIGs response to Naam Tamilar Party members
திருச்சி டி.ஐ.ஜி., வருண் குமார் அவர்களுடைய பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் தன்னுடைய மனைவி வந்திதா பாண்டேவை விவாகரத்து செய்ததாக தகவல்கள் பரவியிருந்தது. இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி' என வருண் குமார் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சி டி.ஐ.ஜி., வருண் குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: 'திரளநிதி திருடன் எந்த அளவிற்கு சென்று விட்டான் பாருங்கள் மக்களே, பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்' என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடவ் வருண்குமார் அவர்கள், 'மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி'. ஒரு பாடல் வரி 'நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே'. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அடிக்கடி இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர், இன்நிலையில் குறித்த பதிவு வைரலாகியுள்ளது.
ஐ.பி.எஸ்., தம்பதியினரான வருண் குமார் மற்றும் வந்திதா விவாகரத்து செய்வதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த தகவல் வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trichy DIGs response to Naam Tamilar Party members