திருச்சியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கோரி! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிக்கை!
trichy part time teachers permanent increse
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தி.மு.க.வின் 181-வது தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற அறிக்கை விடுத்துள்ளனர்:
திருச்சியில், பகுதி நேர ஆசிரியர்களாக அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் உள்ளிட்ட 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம், மனிதாபிமானத்துடன் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளும் இவர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.
எனவே உடனடியாக,பகுதியோ நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கி, இறந்தவர் கும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் மனிதநேயத்தோடு வழங்க வேண்டும்.
ரூ.10 ஆயிரம் சம்பளத்தில், 13-வது கல்வியாண்டில் பணிபுரிந்த ஆசியர்கள் அனைவரும்
வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இதனால் தமிழக முதல்-அமைச்சர் தி.மு.க.வின்181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எஸ்.செந்தில்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
trichy part time teachers permanent increse