திருச்சி | கட்டிய இரண்டே மாதத்தில் உடைந்து விழுந்த மழை நீர் வடிகால் பாலம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு தெருக்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்ப நகர் நேதாஜி தெரு முழுவதும் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மற்றும் குறுக்கு பாலம் அமைக்கப்பட்டது.

இதற்கான பணி நிறைவு பெற்ற இரண்டு மாதத்தில் இலுப்பூர் சாலை மற்றும் நேதாஜி தெரு சந்திப்பில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி உடைந்து மழைநீர் வடிகாலுக்குள் விழுந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக விரைந்து அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலம் அமைக்கப்பட்டு இரண்டு மாத காலத்தில் உடைந்து விழுந்ததால் மக்களின் வரிப்பணம் ரூ.25 லட்சம் வீணடிக்கப்பட்டு விட்டதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy rain drainage bridge damage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->