புத்தாண்டு தினத்தில் சோகம்: மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாப பலி!
Trichy roof collapsed4 people died
திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள காந்திஜி தெருவில் நேற்று இரவு, 50 ஆண்டுகள் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மனைவி, 2 குழந்தைகள் அவரது தாய் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
நேற்று இரவு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததினால் இந்த விபத்து குறித்து எந்த ஒரு தகவலும் அருகில் இருப்பவர்களுக்கு தெரிய வரவில்லை.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடுபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்டனர்.
போலீசார் மீட்கப்பட்ட உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்து புத்தாண்டு தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Trichy roof collapsed4 people died