திருச்சி : இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாசமாக ரீல்ஸ்! இளைஞர் கைது!  - Seithipunal
Seithipunal


திருச்சியில், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாசமாக ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திரைப்படப் பாடல்களை மாற்றம் செய்து, பாலியல் ரீதியான் வார்த்தைகளை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாசமாக ரீல்ஸ் பதிவிட்டு வந்த கௌதம் என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, திருமண பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமான பெண் பக்கத்துவீட்டு இளைஞர் அரவிந்த என்பருடன் முந்திரிக்கட்டில் தகாத உறவில் இருந்தபோது, அங்கு மது அருந்திய கும்பல், அரவிந்தை அடித்து துரத்திவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதில் புளியங்குளம் பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 23 மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள மாணவி மீதமுள்ள 21 மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த கருணைத்தொகையை சம்பத்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Young man Arrested for Abuse reels video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->