திருப்பூரில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து சீரியஸா? உண்மை என்ன? அதிர வைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 65 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100க்கும்  மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை தமிழகத்தின் பிரபல பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அது கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது..

அந்த செய்தியின் படி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உடுமலை வனச்சரகம் பழங்குடியினர் மாவடப்பு செட்டில்மென்ட் குடியிருப்பு பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது அம்பலம் ஆகியுள்ளதாகவும், இதில் கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட காவல்துறை இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப்பகுதியான மாவடப்பு செட்டில்மெண்ட் குடியிருப்பில் கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேர் சீரியஸ் என்ற செய்தி வலைத்தளமான தினமலர் நாளிதழின் முகநூல் பக்கத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி பொய்யான செய்தியாகும். மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் எந்த நிகழ்வும் நிகழவில்லை. எனவே இந்த வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

காவல்துறையின் இந்த அறிவிப்பை தனது X பக்கத்தில் பகிர்ந்து உள்ள அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன், திருப்பூர் மாவட்ட காவல்துறை இந்த அறிவிப்பை சற்று முன்பு வெளியிட்டுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவரே நேரடியாக கருணாபுரம் கள்ளச்சாராயம் மரணங்களில் பொய் சொல்லி இருக்கும்போது, இந்த அறிவிப்பை மட்டும் எப்படி நம்புவது பொய் சொல்லி விடியா அரசு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur Kallasarayam Fake news issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->