மேல்மருவத்தூர் ''பங்காரு அடிகளார்'' மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடர் உருவான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது அவருக்கு 82 வயதாகும் நிலையில் ஆன்மீகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்" என டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran condoles Melmaruvathur Bangara Adikalaar death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->