இது ஈவு இரக்கமற்ற செயலாகும்... கொந்தளிக்கும் டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

திருவண்ணாமலை, செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு 3,200 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவை நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும். எனவே விளைநிலங்களை பறித்து வாழ்வாதாரத்தை கேள்வி குறியாகும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும். 

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பதோடு சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->