கள்ளச்சாராய உயிரிழப்பு.. CBI விசாரணையில் தான் உண்மை தெரியும் - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.!
TTV Dhinakaran says Kallacharayam truth reveal CBI investigation
கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளனர். 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பற்றிய வருகின்றார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் அரசின் தோல்வியை காட்டுகிறது. இந்த சம்பவத்திற்கும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கள்ளச்சாராய விற்பனை காவல் நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள இடத்தில் தான் நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள், தி.மு.க நிர்வாகிகளுடன் இருப்பவர்கள் தான் 57 பேரின் உயிரிழப்பிற்கு காரணம்.
தமிழக முதல்வர் ஏதாவது காரணங்களை தெரிவிக்காமல் இனியாவது கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் இந்த சம்பவம் குறித்து பொறுப்பேற்று தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து உண்மை தெரிய வேண்டும் என்றால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த சம்பவத்தில் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கின்றார் என பார்க்கலாம். அதன் பிறகு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran says Kallacharayam truth reveal CBI investigation