சென்னை ஐஐடியில் உள்ள புள்ளி மான்களுக்கு காசநோயா? - Seithipunal
Seithipunal


சென்னை ஐஐடியில் உள்ள உள்ள புள்ளி மான்களுக்கு காசநோய் பரவும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை வனவிலங்கு காப்பாளர் மணீஷ் மீனா தெரிவித்துள்ளதாவது:- “ புள்ளி மான்களுக்கு காச நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. 

இது ஒரு சந்தேகம் மட்டும் தான். ஒரு புள்ளி மானின் சடலத்தை ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். முடிவுகள் வந்த பின், தேவையான நடவடிக்கை எடுப்போம். கிண்டி தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளிடம் இருந்து ஐஐடி மெட்ராஸில் உள்ள புள்ளி மான்களுக்கு காச நோய் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஜிஎன்பியின் மந்தைகளுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்றுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வனவிலங்கு கால்நடை மருத்துவர் தெரிவித்ததாவது:- "இது குறித்து அச்சப்பட ஒன்றுமில்லை. காசநோய் உறுதி செய்யப்பட்டால் மக்களை தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும். 

அவசரப்பட்டு மருந்துகளை செலுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது. மனிதர்களைப் போலல்லாமல், விலங்குகள் இருமல் மற்றும் உடல் எடையை குறைத்தல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuberculosis disease to chennai iit deers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->