கனமழை எதிரொலி: தூத்துக்குடியில் 8 ஆயிரம் டன் அரிசி, 500 டன் கோதுமை சேதம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் உள்ள இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான குடோனில் பொது விநியோகத்திற்கான அரிசி, பருப்பு, கோதுமை போன்ற இருப்பு வைக்கப்படுகின்றது. 

ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டுவரப்பட்டு இங்கு இருப்பு வைக்கப்படுகிறது. இந்த குடோனின் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும் 2000 டன் கோதுமையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளே புகுந்தது. 

இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் கோதுமை மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்தன. இதில் சுமார் 8000 டன் அரிசியும் 500 டன் கோதுமையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு இந்திய உணவு கழக ஊழியர் சங்கம் செயலாளர் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடியில் பெய்த கன மழை காரணமாக இந்திய உணவு கழக குடோனில் தண்ணீர் புகுந்ததால் அரிசி மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன. 

இதில் 6000 முதல் 8000 டன் வரை செய்தமடைந்திருக்கலாம். இதனால் சேதமடைந்த அரிசி மூட்டைகள் விரைவாக அகற்றப்பட வேண்டும். 

இதில் தாமதம் ஏற்பட்டால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய உணவு கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin 8 thousand tons rice damaged


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->