ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்படுகிறது. இன்று காலை ஏடிஎம் மையத்திற்கு பொதுமக்கள் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எச்சரிக்கை மணி ஒழிப்பது குறித்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4:33 மணியளவில் ஏடிஎம் மையத்திற்கு நுழைந்து ஏடிஎம் எந்திரத்தின் பணம் இருக்கும் அடி பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இதனை அடுத்து ஏடிஎம் எந்திரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். 

இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin atm robbery try police inquiry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->