திடீரென பற்றியெரிந்த படகு: பின்னணியில் அதிர்த்தி தகவல்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்புற திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. 

தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் முனீஸ்வரன். இவருக்கு சொந்தமான நாட்டு படகை மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென படகு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. 

இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே படகை சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தகவல் வெளியானது. 

இதனால் படகுக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin boat caught fire 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->