தென் மாவட்ட வெள்ள பாதிப்பு: இன்று மீண்டும் களமிறங்கிய மத்தியக்குழு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 

இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய ஆய்வு குழுவினர் இன்று தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் மத்திய ஆய்வுக் குழுவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் மத்திய ஆய்வு குழுவினர் பேசும்போது, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக வந்துள்ளோம். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், சாலைகள், வீடுகள் போன்ற பகுதிகள் எந்த அளவு சேதம் அடைந்துள்ளது என்பதை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்துள்ளனர். 

கூட்டம் முடிந்தவுடன் ஆய்வு குழுவினர், குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin central committee re examine today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->