பெண் தூய்மைப் பணியாளர் சரமாரி வெட்டிக் கொலை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் பெண் தூய்மை பணியாளர் மர்ம நபரால் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி, மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா (வயது 45). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார். 

இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் கனகா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணிக்காக தூத்துக்குடி சிஜிஇ காலனிக்கு பேருந்தில் வந்திருந்தார். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கனகாவை அறிவாளால் சரமாரியாக வேட்டி தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகாவை வெட்டி கொலை செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin Female cleaning worker death issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->