ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 சவரன் அபேஸ்! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, சின்னமணி நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 63) இவர் நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சென்னையில் பணியாற்றி வருகிறார். 

மனைவியை பார்ப்பதற்காக சுகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியே மனைவியை பார்ப்பதற்கு சென்னைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் வேலை செய்யும் பணி பெண் வழக்கம்போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்துள்ளது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணிப்பில் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் இருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் வீட்டில் சுமார் 100 சவரன் தங்கத்துக்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin vice chancellors house jewelery theft


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->