ஆளுநரின் தேநீர் விருந்து - தமிழக வெற்றிக்கு கழகம் புறக்கணிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அதன் படி இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி சென்னை கிண்டியிலுள்ள ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக கட்சி தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா? இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. 

இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk avoide governor party for republic day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->