தவெக மாநாடு : பரிசுகளை வாரி வழங்க இருக்கும் விஜய்...இதோ வெளியான காரணம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் என்ற  கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தற்போது கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.  

கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி  விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.  

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அடுத்த மாதம்  23-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு உத்தரவு வெளியாகி உள்ளது.

அதன்படி மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளதால், உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.


 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk Conference Vijay is going to present the prizes here is the reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->