யுகாதிக்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்!!! கொண்டாட்டத்தில் யுகாதி கொண்டாடுவோர் !!!
TVK leader Vijay congratulated ugadi people who celebrate ugadhi
'யுகாதி பண்டிகை',தென்னிந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும் .இந்தப் பண்டிகை,தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் காலம் காலமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இது தெலுங்கு வருட பிறப்பின் முதல் நாள் அன்று யுகாதி பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்த பண்டிகை உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இருப்பினும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதில் இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதையடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோருக்கு யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் .இது தற்போது ட்விட்டரில் பரவலாகி வருகிறது.
English Summary
TVK leader Vijay congratulated ugadi people who celebrate ugadhi