ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய த.வெ.க தலைவர்.!
tvk leader vijay visit army soldires
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டை தொடர்ந்து வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
அதற்கேற்றவாறு விஜய் அரசியல் வியூகங்களை அமைத்து வருகிறார். இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்ற விஜய், அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
அவர்களுடன் சிலமணி நேரம் செலவிட்டு, ராணுவ வீரர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அவர்களுடனும் விஜய் கலந்துரையாடினார்.
English Summary
tvk leader vijay visit army soldires