திமுக பெயரை நேரடியாக கூறிய தவெக தலைவர் - மகளிர் தின வாழ்த்தில் வெளிவந்த சம்பவம்.!
tvk leader vijay wishes to womens day
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “தமிழகம் முழுவதும் உள்ள என் அக்கா, தங்கை, அம்மா என்று அனைத்து பெண்களுக்கும் மகளில் தின வாழ்த்து. உங்களுக்கு சந்தோசம் தான்.. அந்த சந்தோசத்தை பாதுகாப்பாக இருந்தால் தான உணர முடியும். பாதுகாப்பு இல்லாத போது.. எப்படி சந்தோசம் இருக்கும்.

நீங்கள், நான் என்று எல்லாரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம்.. ஆனால் அவங்க நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே தெரியுது. எல்லாமே மாறக்கூடியது தான்.. மாற்றத்திற்கு உரியதுதான்.. கவலைப்படாதீங்க.. 2026ல் நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம்.
அதற்காக மகளிர் தினத்தில் நாம் அனைவரும் உறுதி ஏற்ப்போம்.. எல்லா சூழ் நிலைகளிலும் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, தோழனாக உங்களோடு நான் நிற்ப்பேன்..!” என்று தெரிவித்திருந்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக பெயரை நேரடியாக கூறியது இதுவே முதல் முறை ஆகும்.
English Summary
tvk leader vijay wishes to womens day