த.வெ,க கட்சியின் முதல் மாநாடு எப்போது? - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். இதற்கு பலரும் வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிக்கையில் வெளியிட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு தொடர்பான பணிகள் முடிந்த பின்னர் த.வெ.க. தலைவர் விஜய்யின் கவனத்திற்கு அதை கொண்டு சென்று விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk party first conference bussy anand info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->