பணம் இரட்டிப்பு! மொத்தமாக சிக்கிய மோசடி கும்பல்! ரூ.3.45 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தேனியில் தாங்கள் தரும் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்தவன் தவச்செல்வம். இவரிடம் தேனியைச் சேர்ந்த ஒரு கும்பல் ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் பழைய 2000 ரூபாய் நோட்டுக்களாக 20 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய தவச்செல்வம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி தேனி நகர் மதுரை சாலையில் உள்ள சர்ச் அருகே உள்ள ஒரு கும்பல் இடம் 10 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்ற கும்பல் கூறியபடி 20 லட்சம் தராமல்  தவசெல்வத்தின் செல்போனையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதால் தவ செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை  தேனி புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் ஒரு அட்டைப்பெட்டியில்  புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரில் வந்த இரண்டு பேரை கைது செய்து காவல்நிலையம் வைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் நாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர் பாபு மற்றும் போம்மையக்கவுண்டன் பட்டியை சேர்ந்த கேசவன் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பணம் இரட்டிப்புக்காக வருபவர்களிடமிருந்து ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை தராமல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் போலீசார் இரண்டு பேரின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவர்கள் வீட்டில் இருந்து ரூபாய் 15 லட்சம் பணம் கைபற்றப்பட்டுள்ளது. மேலும் பணம் மிரட்டிப்பு மோசடிக்காக கலர் ஜெராக்ஸ் மூலம் அச்சடிக்கப்பட்ட ரூபாய் 3 கோடி 45 லட்சம் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து மேலும் பலரைத் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two arrested for fraud by claiming to double the money they give in Theni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->