சீர்காழி அருகே சோகம் - லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.!
two college students died for accident in seerkazhi
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் புவனேஷ். இவருடைய நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம்.
இவர்கள் இரண்டு பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அதன் படி அவர்கள் புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து இரண்டு பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
two college students died for accident in seerkazhi