ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த இரண்டு நாள் அவகாசம்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே மின் கட்டணத்தை இணையவழியிலும், நேரடியாகவும் வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, இந்த மாதம் 24 முதல் 30-ம் தேதி வரை இறுதிநாளாக உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் கூடுதலாக இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக, ஒரு நுகர்வோருக்கு இந்த மாதம் 28-ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். 

அதேசமயம்,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த கால அவகாசம் வழங்க வேண்டும். இது குறித்த தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் மூலமாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days extension for electricity bill pay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->