போர்க்களம் போல் காட்சியளித்த ஆட்சியர் அலுவலகம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் 31 கிராமங்களில், கனிமவளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம், தொடர்பான டெண்டர் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அந்த வகையில் இந்த டெண்டரில் பங்கேற்க, பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் வந்திருந்தார். 

அதன் படி அவரும், முருகேசன் என்பவரும் விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கு முகமூடி அணிந்து வந்த சிலர், அவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தி தாக்கினர். இந்த சம்பவத்தால், ஆட்சியர் அலுவலகம், போர்க்களம் போன்று காட்சியளித்தது. 

இதையடுத்து, ஆட்சியர் கற்பகம், ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பலத்த பாதுகாப்பு நிறைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரு தரப்பினர் இடையே நடந்த மோதல், சம்பவம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two gangs attack in perambalur collector office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->