நூதன முறையில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - இருவர் கைது.!
two peoples arrested for fraud foreign calls covert local calls
சென்னையில் உள்ள மயிலாப்பூரில் ஏர்டெல் தொலைத்தொடர்பு அலுவலகத்தின் நோடல் அலுவலர் ஜெயகுமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "பல்லாவரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்தின் தொலைத் தொடர்பை பயன்படுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்லாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒருவர் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேபோன்று, பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி சிலர் தொழில்நுட்ப சாதனைங்களை பயன்படுத்தி போலியாக சிம்கார்டை செயல்பட செய்து சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பல்லாவரத்தில் தங்கி இருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாஹத் முகமது மற்றும் சித்தாலபாக்கத்தில் தங்கியிருந்த சாஹல் உள்ளிட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் கைது செய்தவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், ரவுட்டர் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த ஐந்து மாதங்களாக இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் மூலம் இதனை கற்றுக்கொண்டு, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்துள்ளனர்.
அதன் பின்னர் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், மற்ற வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக கூறியதால், அந்த நபர்கள் அவர்களுக்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் கைதான இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
two peoples arrested for fraud foreign calls covert local calls