திருப்பூரில் சோகம் - லாரி மோதி பள்ளி மாணவிகள் பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சோகம் - லாரி மோதி பள்ளி மாணவிகள் பலி.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பள்ளகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபேஷ்குமார்-சுமதி தம்பதியினர். இவர்களுக்கு கனிஷ்கா, சஸ்விகா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தனர்.

இந்த நிலையில், சிறுமிகள் இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். இவர்களை அவர்களது தாத்தா தங்கராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். இதையடுத்து இவர்கள் பள்ளகவுண்டம்பாளையம் அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி தங்கராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தங்கராஜ் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் செல்வராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two school students died for accident in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->