மதுபானக் கடைகளில் 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதால் மதுபிரியர்கள் தவிப்பு.! - Seithipunal
Seithipunal


மதுபானக் கடைகளில் 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதால் மதுபிரியர்கள் தவிப்பு.!

நாட்டில், தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 23 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் இருபது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அந்தப் பற்றாக்குறையை சரி செய்வதற்கே ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்திற்கு வந்தபின் 2019ஆம் ஆண்டே ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தபட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மதுபானக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு மதுபனாக் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two thousand notes not purchase in tasmac


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->