நாகர்கோவிலில் பரபரப்பு - குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்.!! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் பரபரப்பு - குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வேம்பனூர் பகுதியில் பெரியகுளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் இன்று மீனவர்கள் சிலர் வலை விரித்து மீன்பிடித்துள்ளனர். அப்போது, பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்று கிடைத்தது. 

அந்தப் பொட்டலத்தில் ஏராளமான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள்  நனைந்த நிலையில் இருந்தது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து திரும்பப் பெற்றது. 

இந்த நிலையில், யாரோ இந்தப் பணத்தை பதுக்கி வைத்து தூக்கி வீசி இருக்கலாம் என்று நினைத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் போலீசார் அந்த பணத்தை பார்த்த போது அதில், கனரா பேங்க் ஸ்லிப்கள் இருப்பதும், அதன் மேல் சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அந்த நோட்டுகள் போலியானதாக இருந்தாலும் பார்ப்பதற்கு உண்மையான நோட்டுகள் போலவே இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த போலி தாள்களை  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two thousand notes seized in nagarkovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->