திருப்பதியில் அதிர்ச்சி - இரண்டு வயது சிறுவன் கடத்தல் - கதறும் சென்னை தம்பதி.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் அதிர்ச்சி - இரண்டு வயது சிறுவன் கடத்தல் - கதறும் சென்னை தம்பதி.!

சென்னையை சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-மீனா தம்பதியினர். இவர்களுக்கு அருள்முருகன் என்ற மகன் உள்ளார். இவர்கள் மூன்று பேரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். 

அங்கு தரிசனம் முடித்த பின்னர் சென்னை செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளனர். அப்போது இரவு 2 மணி வரை பெற்றோரின் அருகில் தூங்கிய சிறுவன் 2.20 மணியளவிற்கு காணாமல் போயுள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி போலீஸார் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. 

இதையடுத்து போலீசார் குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இதற்கிடையே சிறுவனின் பெற்றோர் குழந்தையை மீட்டுத்தர தமிழ்நாடு அரசும், ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two years old boy kidnape in tirupathi temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->