ரூ.1000 திட்டத்திற்கு பதிவு செய்வதாக கூறி மூதாட்டியின் கம்மலை ஆட்டய போட்ட மர்ம நபர்.!
Unknown person cheat old women for register 1000 scheme in thenkasi
தென்காசியில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதாக கூறி மூதாட்டியின் கம்மலை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி நகரில் உள்ள மாதா கோயில் தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி கல்யாணி (வயது 81). இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் குடும்ப நிலையை சகஜமாக பேசி விசாரித்துள்ளார். இதில் மூதாட்டி வறுமையால் தவிப்பதாகவும் தனக்கு யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதில் அந்த நபர் தமிழ்நாடு அரசு மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இதை வாங்குவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நான் அழைத்து செல்கிறேன் என கூற மூதாட்டியும் அவருடன் சென்றுள்ளார்.
அப்போது அரசின் ரூ.1000 திட்டத்திற்கு போட்டோ எடுக்க வேண்டும் என ஸ்டுடியோ அருகே நிற்க வைத்த அந்த நபர் கம்மல் இல்லாமல் ஏழையாக போட்டோ எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையும் நம்பி மூதாட்டி தனது கம்மலை கழற்றி தனது கைப்பைக்குள் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் மர்ம நபர் தான் சென்று விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் வாங்கி வருவதாகவும் அதுவரை இங்கேயே நிற்க வேண்டுமென மூதாட்டியிடம் கூறிவிட்டு கம்மலை திருடிவிட்டு மர்ம நபர் எஸ்கேப் ஆகியுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் இளைஞர் வராததால் மூதாட்டி தனது பையை சோதனை செய்தபோது கம்மலை திருடியது தெரியவந்தது. அதன் பிறகு பொதுமக்கள் விசாரித்த போது மர்ம ஒருவர் தனது கமலை திருடி சென்ற சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமாகவே ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு நடக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Unknown person cheat old women for register 1000 scheme in thenkasi