தென்காசி: பாஜக நிர்வாகிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்ட பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 

மேலும் சில முக்கிய நிர்வாகிகள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு பாஜக தொண்டர்கள் அவரவர்களின் வாகனங்களில் வீடு திரும்பினர்.

அப்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாஜக நிர்வாகிகள் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் பாஜக நிர்வாகிகள் சென்ற வாகனங்களின் மீது தக்காளி, முட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unknown persons attack BJP in thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->