அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ. 7.6 கோடி நிதி ஒதிக்கீடு! மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!
Upgrading Amma Restaurant Rs 7 crore 60 thousand financial provision
அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ. 7.6 கோடி நிதி ஒதிக்கீடு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திட்டமாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அம்மா உணவகங்ககளை மேம்படுத்துவதற்காக ரூ.21 நிதி ஒதுக்கினார்.
அதனை பலரும் பாராட்டினார்கள். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகங்கள் மீது ஸ்டாலினுக்கு திடீர் அக்கறை. எதற்காக சென்னையில் 17 அம்மா உணவகங்களை மூடிவிட்டு ,தற்போது முதலை கண்ணீர் வடிக்கிறார் என்று கட்டமாக தெரிவித்திருந்தார்.
சென்னை அம்மா உணவகத்தில் பைதாகி உள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை சீர் அமைக்க வேண்டும். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு அரிசி பருப்பு ஆகியவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் அம்மா உணவகத்தில் தரத்தை மேம்படுத்துவதற்காக பழைய பாத்திரங்கள் மற்றும் சீரமைப்பு செய்வதற்காக சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ரூ. 7.6 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Upgrading Amma Restaurant Rs 7 crore 60 thousand financial provision