சற்றுமுன் | தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
Vaigai dam open flood warning aug 31
வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த நல்ல மழை காரணமாக, அணை நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், வைகை அணை இன்று திறக்கப்பட உள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வைகை அணை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில், "தேனி மாவட்டத்தில் 30.08.2022 அன்று பெய்த கன மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் 31.08.2022 அன்று முற்பகல் 11.30 வைகைஅணையின் மணிக்கு மட்டம் 70.00 அடியாக உயர்ந்தது.
அணையில் முற்பகல் 11.30 அணையிலிருந்து 4006 கன அடி விடப்பட்டுள்ளது காரணமாக, ஆற்றின் கரையோரமாக உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vaigai dam open flood warning aug 31