ரஷ்யா - உக்ரைன் போர் உலகநாடுகளை பிச்சைப் பாத்திரமாக்கிவிடும் - கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த எட்டு மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் பழுதடைந்தது உள்ளன.

இந்நிலையில், உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், அந்த பாலம் பயங்கரமாக சேதம் அடைந்தது. 

இந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது போல் இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும். வரும் 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும். இதனால், போரை உடனடியாக நிறுத்துங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuththu twitter post for russia ukrain war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->