சிதம்பரம் அருகே விவசாயி அடித்து கொலை? போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


 சிதம்பரம் அருகே விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். 46 வயது விவசாயியான இவர் இன்று காலை கத்தாழை ஊராட்சிக்கு உட்பட்ட என்எல்சி ஏரிக்கரையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வேல்முருகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது வேல்முருகனின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valayamadevi farmer dead issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->