வண்டலூர் : ரயில் மோதி 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு.!
Vandalur 19-year-old college student killed in train accident
தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில் 19 வயது சோனியா என்ற கல்லூரி மாணவி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நண்பர்களுடன் சென்று திரும்பும் போது நடைமேடையை கடக்க தண்டவாளத்தின் குறுக்கே கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது நடைமேடையில் ஏற முயன்ற மாணவி சோனியாவால் உயரம் குறைவாக இருந்ததால் ஏற முடியவில்லை. அப்போதே திடீரென ரயில் வந்ததால் அவர் மீது ரயில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
Vandalur 19-year-old college student killed in train accident